‘‘தக்க சமயத்தில் மருந்து வழங்கியமைக்கு நன்றி’’- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

covid19 tamilnadu mkstalin
By Irumporai May 16, 2021 04:04 PM GMT
Report

ரெம்டிசிவர் மருந்தினை தமிழகத்திற்கு உயர்த்தி வழங்கியதற்கு மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ள கடிதத்தில்:

ரெம்டெசிவர் மருந்தை, நாளொன்றுக்கு 20,000 என்ற அளவில் உடனடியாக உயர்த்தி வழங்கியமைக்காக, தன் நன்றியை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொடிய கொரோனா பெரும் தொற்றை எதிர்த்து போராடும் இத்தருணத்தில், குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்ஸிஜன் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் தேவை இன்றியமையாதது என முதல்வர் தெரிவித்துள்ளார்.