இலங்கை அதிபருக்கு எதிராக மீண்டும் போராட்டம் : போராட்டத்தை அடக்க எந்த நிலைக்கும் செல்ல போலீசாருக்கு அனுமதி
இலங்கை அதிபருக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளதால் தலைநகர் கொழும்புவில் பதட்ட நிலை நிலவிவருகிறது.
இலங்கை போராட்டம்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெற்றுக்கடியை தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஆனால் மீண்டும் போராட்டம் வெடித்தால் அதனை கட்டுப்படுத்த எந்த நிலைக்கும் செல்லலாம் என போலீசாருக்கும், ராணுவத்தினருக்கும் கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தலைநகர் கொழும்புவில் தடையை மீறி பேரணி சென்ற மாணவர்கள் அதிபர் மற்றும் பிரதமர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.
மீண்டும் பதற்றம்
அப்போது தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டகாரங்களை போலீசார் விரட்டியடித்தனர்.
கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள மாணவர் அமைப்பின் தலைவர்கள் 2 பேரை விவிடுவிக்குமாறு போராட்டகாரர்கள் வலியுருத்தினர். ராஜபசே குடும்பத்தினரின் பாதுகாவலராக அதிபர் ரணில் இருபப்தாக விமர்சித்தும் அவர்கள் முழக்கமிட்டனர்.