திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

M K Stalin ADMK DMK AIADMK Edappadi K. Palaniswami
By Thahir Dec 02, 2022 07:05 AM GMT
Report

திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கோவையில் போராட்டம் 

கோவையில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது.

சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஈபிஎஸ், ஒரு ஆட்சி எப்படி நடக்க கூடாது ஒரு முதலமைச்சர் எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பது இந்த 18 மாத ஆட்சியில் காட்டியுள்ளனர்.

protests-across-tn-condemning-the-dmk-govt-eps

தமிழகம் முழுவதும் போராட்டம் 

அதிமுகவை பற்றி பேச ஒரு தகுதி வேண்டும். அது முதலமைச்சருக்கு கிடையாது. திமுகவின் 18 மாத கால ஆட்சியில் மக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர் என விமர்சித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில், சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம், கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.