இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
பிரதமர் வீட்டிற்கு தீ வைப்பு
பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கையில் மீண்டும் மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதனால், இலங்கையில் மீண்டும் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக மீண்டும் வெகுண்டெழுந்தனர்.
இன்று இலங்கை அதிபர் மாளிகையை நோக்கி வந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், தப்பித்தோம் பிழைத்தோம் என மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே ஒடினார்.
இலங்கை கடும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், அனைத்துக் கட்சித்தலைவர்களின் கோரிக்கையை ஏற்று எனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.