25 சதவீதம் பெட்ரொல் போட்டுவிட்டு 75 சதவீதம் ஊழல் ; வாகன ஓட்டிகளை ஏமாற்றிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள் - வலுக்கும் போராட்டம்

mannarkudi petrolbunkscam petrolscam
By Swetha Subash Apr 07, 2022 08:06 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் மன்னார்குடி பெட்ரோல் பங்க் ஒன்றில் நுகர்வோர்களை ஏமாற்றி ஊழல் முறைகேடு.

பங்கை முற்றுகையிட்டு நுகர்வோர்கள் போராட்டம் . வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்களிடம் மன்னார்குடியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுவரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாடே பொருளாதார நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக வாகன ஓட்டிகள் பெட்ரோல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுஒருபுறம் என்றால் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்பவரும் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பெரும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

25 சதவீதம் பெட்ரொல் போட்டுவிட்டு 75 சதவீதம் ஊழல் ; வாகன ஓட்டிகளை ஏமாற்றிய பெட்ரோல் பங்க் ஊழியர்கள் - வலுக்கும் போராட்டம் | Protest Rose In Mannarkudi Petrol Bunk Over Scam

அதாவது வாகனத்திற்கு ரூ.100க்கு பெட்ரோல் போடவரும் வாடிக்கையாளர்களிடம் 25 சதவீத அளவிற்கு பெட்ரோல்போட்டு 75 சதவீதம் அளவிற்கு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர் .

இதுசம்மந்தமாக புகார்கள் சம்மந்தப்பட்ட பெட்ரோல் கம்பெனியிடமும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது எடுக்கப்படவில்லை.

இதற்காக சம்மந்தப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர் அதிகாரிகளுக்கு மாமூல் வழங்கிவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதிப்புக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் ஊழல் முறைகேட்டில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சம்மந்தப்பட்ட பெட்ரோல் பங்கினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .