200 வது நாளை எட்டிய பரந்தூர் போராட்டம் : போலீசார் குவிப்பு

By Irumporai Feb 11, 2023 05:43 AM GMT
Report

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்தும் போராட்டம் இன்று 200வது நாளை எட்டியுள்ளது. அதனால் ஆயிரகணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தூர் போராட்டம் 

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் கிராம பகுதியில் மீனம்பாக்கத்தை அடுத்து ஓர் பெரிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்தது .

200 வது நாளை எட்டிய பரந்தூர் போராட்டம் : போலீசார் குவிப்பு | Protest Parantur Airport 200Th Day

இதற்காக, பரந்தூர் கிராமத்தை சுற்றி 13 கிராம பகுதியில் இருந்து 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு தீர்மானித்து அதற்கான வேலைகளை ஆரம்பித்தது.    

போலீசார் குவிப்பு

இந்த நிலம் கையகப்படுத்தும் முடிவுக்கு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இந்த போராட்டத்தை அடுத்து போராட்டக்காரர்களுடன் சமாதானம் பேச தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் வந்தனர். ஆனால் , அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டமானது இன்று 200வது நாளை எட்டியுள்ளது. 200வது நாள் என்பதால், அங்கு தேவையில்லாத அசம்பாவித சம்பவம் எதுவும் நடந்து விட கூடாது என காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர் தலைமையில் 7 டிஎஸ்பிக்கள் அடங்கிய 1000க்கும் மேற்பட்ட காவலர்கள் காவலில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர 13 வட்டாட்சியர்களும் போராட்டம் நடக்கும் இடத்தில் இருக்கின்றனர். இந்த போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆதரவளித்துள்ளார்.