சென்னையில் வலுக்கும் ஸ்விக்கி ஊழியர்களின் போராட்டம்
பணியில் பழைய நடைமுறையே கடைபிடிக்க வேண்டும் என்று கோரி ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வலுக்கும் ஸ்விக்கி ஊழியர்களின் போராட்டம்
உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்க நிறுவனத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பணி புரிந்து வருகின்றனர்.
இவர் கடந்த சில நாட்களாக நிறுவனத்தில் பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையிலிருந்து பெங்களூரில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நோக்கி நடை பயணமாக 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த திங்கட்கிழமை முதல் ஸ்விக்க ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
எங்களது சம்பளத்தை புதிய திட்டத்தில் கொண்டு வந்து கொடுக்க முயற்சிக்கிறார்கள். எங்களுக்கு பழைய முறையில் சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம் இது வரை எந்த முடிவும் தெரியவில்லை.
எங்கள் தலைமை அலுவலகம் நுங்கம்பாக்கத்தில் உள்ள அங்கு சென்றும் கோரிக்கை வைத்தோம் ஆனால் ஏற்க்கப்படவில்லை.
நிறுவனம் எங்களை புதிதாக கொண்டு வந்த நடைமுறையில் தான் வேலை செய்ய வேண்டும் என்நு வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.