இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட மேலும் ஒருவர் பலி.! காரணம் என்ன?
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அனுமதி வழங்கியதில் முறையான நடைமுறை பின்பற்றப்படவில்லை, போதிய தரவுகள் வெளியிடப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தியிருந்தன. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட இருவர் சில நாட்களில் பலியான சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
ஆனால் இருவரின் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்க்கும் தொடர்பில்லை என அரசு விளக்கம் அளித்திருந்தது. தற்போது தெலுங்கானாவில் நேற்று 42 வயதுமிக்க சுகாதார பணியாளர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட மாநில சுகாதார துறை முதற்கட்ட விசாரணையில் பணியாளர் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல என தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.