வன்முறைக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: விவசாயிகள் சங்கம்
டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். குடியரசு தின விழா அன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
இதன்படி இன்று தொடங்கிய பேரணியில் தடுப்புகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர், இதில் படுகாயமடைந்த விவசாயி ஒருவர் உயிரிழந்தாக தெரிகிறது. இந்நிலையில் டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுடன் தங்களுக்கு தொடர்பில்லை என்று விவசாயிகள் சங்கம் விளக்கமளித்துள்ளது.
மேலும் அரசியல் பின்புலத்தில் இருந்து விவசாயிகள் பேரணியில் பங்கேற்றவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டனர் எனவும், வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை விரைவில் பிடித்து தருவோம் என்றும் பாரதிய கிசான் சங்கம் கூறியிருக்கிறது.
இதற்கிடையே தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை செங்கோட்டையை விட்டு செல்லப்போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.