எலான் மஸ்கை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புங்க - வெடிக்கும் போராட்டம்!
தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
ட்ரம்ப்-எலான் மஸ்க்
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப் வெளிநாடுகள் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், உள்நாட்டிலும் அதிரடியான சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.
பல திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்கிறார். கருத்தடை மருந்துகள், ஆண், பெண் என இரு பாலினத்தவர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுவார்கள், பாதுகாப்புப் படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்குத் தடை போன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவில் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளன.
வெடிக்கும் போராட்டம்
இந்நிலையில் ட்ரம்ப்பையும் அவரது அரசில் செயல் திறன் மேம்பாட்டு துறையின் தலைவராக இருக்கும் தொழிலதிபர் எலான் மஸ்க்கையும் எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன. ட்ரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
லாஸ் ஏஞ்சலிஸ், மின்னசோட்டா என 50 மாநிலங்களின் தலைநகரங்களில் ஒரே நாளில் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். தொடர்ந்து இரு பாலின கொள்கையை எதிர்த்து LGBTQ+ சமூகத்தை சேர்ந்தவர்கள் அலபாமாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.