சுவிட்சர்லாந்தில் ஒலிந்திருக்கும் புதினின் ரகசிய காதலியை நாடு கடத்த வலுக்கும் ஆதரவு
சுவிட்சர்லாந்தில் ஒலிந்திருக்கும் புதினின் ரகசிய காதலியை நாடு கடத்த புதின் எதிர்ப்பாளர்கள் சுவிஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
69 வயதான ரஷ்ய அதிபர் புதினுக்கு அலினா கபேவா என்ற ரகசிய காதலி இருக்கிறார். 38 வயதான அலினா கபேவா முன்னாள் தடகள வீராங்கனை ஆவார்.

அதிபர் புதினுடனான ரகசிய காதலில் பிறந்த மூன்று குழந்தைகளுடன், அலினா சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை நிகழ்த்திவரும் சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மாத தொடக்கத்திலேயே அலினா ஒரு தனியார் பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் புதினின் எதிர்ப்பாளர்கள், ரகசிய காதலி அலினாவை நாடு கடத்த வேண்டும் என்று சுவிட்சர்லாந்து அரசுக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.
‘சேஞ்ச்.ஆர்க்.’(change.org) என்ற வலைத்தளத்தில் பதிவிடப்பட்டிருந்த இந்த மனுவில்,
“ரஷ்ய அரசியல் மற்றும் ஊடகப் பிரமுகரும், முன்னாள் தடகள வீரருமான அலினா கபேவா, ரஷ்ய கூட்டமைப்புகளின் மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளின் விளைவுகளில் இருந்து ஒலிந்து உங்கள் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார் என்பதை பொதுமக்கள் இப்போதுதான் அறிந்துகொண்டனர்.

அலினா, உக்ரைனை கொடூரமாகத் தாக்கி வரும் ஒரு சர்வாதிகாரி மற்றும் போர்க் குற்றவாளியின் விருப்பமான மனைவி.
ரஷ்ய சர்வாதிகாரியுடன் அலினா கைக்கோர்த்துள்ளதால் அவர்மீது கறைப்படிந்தது மட்டுமள்ளாமல் அவர், மனித குலத்திற்கு எதிரான குற்றவாளியும் கூட” என குறிப்பிட்டுள்ளது.
இதுவரை இந்த மனுவில் 57 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து சுவிட்சர்லாந்து அரசு புதினின் காதலியை நாடு கடத்தி அவருடன் சேர்த்து வைக்குமா என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் எழுந்துள்ளது.