அவ்வளவு நேர வேலையா..? வேலைநிறுத்தத்தில் ஸ்விக்கி ஊழியர்கள்!

Chennai Swiggy
By Sumathi Sep 19, 2022 01:32 PM GMT
Report

புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 ஸ்விக்கி

நாடு முழுவதும் ஸ்விக்கி சார்பில் ஊழியர்கள் உணவு டெலிவரி செய்து வருகின்றனர். வழக்கமாக இந்த உணவு டெலிவரி தளத்தில் வேலை செய்பவர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். மேலும், அவர்களுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அவ்வளவு நேர வேலையா..? வேலைநிறுத்தத்தில் ஸ்விக்கி ஊழியர்கள்! | Protest Against New Rules Of Swiggy Workers

ஆனால் தற்போது ஸ்விக்கி நிறுவனம் புதிய விதிமுறகளை கொண்டு வந்துள்ளது. அதில், ஊழியர்களின் 12 மணி நேர வேலை நேரம் 16 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் ஊக்கத்தொகையும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

போராட்டத்தில் ஊழியர்கள்

மேலும், அதிக நேரம் வேலை பார்த்து, அதிக ஆர்டர்களுக்கு உணவு டெலிவரி செய்தாலும் குறைந்த அளவே ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. குறைவான ஊதியம், குறைக்கப்பட்ட ஊக்கத்தொகை மற்றும் வேலை நேரம் அதிகரிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து

அவ்வளவு நேர வேலையா..? வேலைநிறுத்தத்தில் ஸ்விக்கி ஊழியர்கள்! | Protest Against New Rules Of Swiggy Workers

சென்னையில் ஸ்விக்கி உணவு டெலிவர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பழைய விதிமுறைகளையே மீண்டும் கொண்டுவர ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலை முதலே தொடங்கிய போராட்டம் மாலை வரை தொடர்ந்து வருகிறது. இதனால் உணவு ஆர்டர்கள் செய்யமுடியாமல் ஸ்விக்கி நிறுவனம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.