எதிரியையும் வாழவைத்தவர் எம்.ஜி.ஆர் - திமுக இந்த போக்கை கைவிட வேண்டும் - இபிஎஸ்..!
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
திமுகவின் துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, பொதுக்கூட்டத்தில் ஒன்றில் பேசும் போது, முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான எம்.ஜி.ஆர் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில், தங்கள் கட்சியின் தலைவரை குறித்து அவதூறாக பேசியதாக அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
எதிரியையும் வாழவைத்தவர்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், எதிரியையும் வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர் என்று சுட்டிக்காட்டி, நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாக பேசுவதை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதிமுக ஆட்சியில் ஏராளமாக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்று கூறிய அவர், கூட்டு குடிநீர் திட்டங்களை திட்டமிட்டு நிறைவேற்றியது அதிமுக தான் என்று கூறி, தங்கள் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களையே தற்போது திமுக அரசு நிறைவேற்றுகிறது என்று விமர்சனம் செய்தார்.