பலாத்காரவாதிகளை ஆதரிப்பவர்களிடம் மகளிர் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது : ராகுல் காந்தி
பாலியல் வன்கொடுமை செய்பவர்களை சிறையில் இருந்து விடுவித்து, மரியாதை செய்பவர்களிடம் இருந்து மகளிர் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், லக்கீம்பூரில் பட்டப்பகலில் சிறுமிகளான தலித் சகோதரிகள் 2 பேர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டு உள்ளது துயரமளிக்க கூடிய விசயம் என கூறியுள்ளார்.
நாட்டில் மகளிருக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். மேலும், மேலும் நாட்டில் மகளிருக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்
பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் ஏற்பட்ட வன்முறை மற்றும் மதக்கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற 21 வயது கர்ப்பிணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் பானுவின் உறவினர்களில் 17 பேரில் பில்கிஸ் பானுவும், ஒரு ஆண் நபர், ஒரு குழந்தை என 3 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். மற்றவர்கள் வன்முறைக்கு பலியானார்கள்.
போராட்டங்கள்
இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. ஆர்ப்பாட்டங்கள், தர்ணா போராட்டங்களும் நடத்தப்பட்டன.