தமிழ் குறித்து பேசினால் சிலருக்கு கசக்கத்தான் செய்கிறது - முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழுக்கு பழம்பெருமை இருப்பதால் அது குறித்து பேசுகிறோம், அவர்களுக்கு பேச எந்த பெருமையும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழினம்
உலகின் மிக மூத்த மொழிகளில் முதல் மொழியான தமிழுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்றும் ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் தமிழினம், 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கைகளில் வாழ்கிறார்கள் என்றும்,
உலகம் முழுவதும் பரந்து, விரிந்து வாழும் இனம் தமிழினம் என்றும் அந்நிகழ்ச்சியில் அவர் கூறியுள்ளார்.
தமிழுக்கு பழம்பெருமை
இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ்நாட்டில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்றும் தமிழுக்கு பழம்பெருமை இருப்பதால் அதுகுறித்து பேசுகிறோம்: அவர்களுக்கு பேச எந்த பெருமையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தை திமுக அரசு உருவாக்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் குறு தொழில் செய்ய மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அழுகிய கணவர் உடலுடன் நான்கு நாட்கள் இருந்த மனைவி-கொடூர சம்பவம்!