'டேட்டிங் கிளப்' டெலிகிராமில் பாலியல் தொழில் - துருக்கி பெண் உட்பட 8 பேர் அதிரடி கைது!
பெங்களூருவில் டெலிகிராம் மற்றும் பிற மொபைல் பயன்பாடுகளை பயன்படுத்தி பாலியல் தொழில் நடத்திய துருக்கி பெண் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொழில்
இதுகுறித்து பெங்களூரு நகர காவல் ஆணையர் பி தயானந்தா கூறியதாவது "துருக்கியை சேர்ந்த பயோனியாஸ் 15 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை துருக்கியில் சந்தித்து திருணம் செய்து கொண்ட பயோன்யாஸ், இந்தியா வந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் இறந்துவிட்டார். பின்னர், பயோன்யாஸ் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் 8 முதல் 10 ஆண்டுகளாக சட்டவிரோதமாக பாலியல் தொழிலின் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.
போலீசார் அதிரடி
பெங்களூரு டேட்டிங் கிளப் என்ற பெயரில் ஒரு டெலிகிராமில் சேனல் வைத்து பாலியல் தொழில் நடத்தப்படுவதை நாங்கள் அறிந்தோம்.
அதில், பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வந்தனர். இது குறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தவர்களில் ஒருவர் வாடிக்கையாளர் போல மாறுவேடத்தில் சென்று பிடித்தார்" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.