சுரங்கம் அமைத்து விபச்சாரம் - 7 பெண்கள் அதிரடி கைது
சுரங்கம் அமைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 7 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுரங்கம் அமைத்து விபச்சாரம்
பெங்களூரு மார்க்கெட் மற்றும் காட்டன் பேட் பகுதிகளில் உள்ள தனியார் ஓட்டல்களில் விபச்சார தொழில் நடப்பதாக வந்த புகாரின் பேரில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு விடுதிகளில் சோதனை நடத்தினர்.
பின்னர், துர்கா தங்கும் விடுதியில் போலீஸார் சோதனை நடத்தியபோது, விபச்சாரத்திற்காக பெண்களை அடைத்து வைக்கும் விடுதியின் அறைகளில் ரகசிய சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
போலிசார் நடத்திய சோதனையில், அறையில் இருந்து விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும், விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு ஆண்களையும் போலீசார் கைது செய்தனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு பெண்களும், விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆறு ஆண்களும் மூன்று விடுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.