கல்லுாரி மாணவிகளை வைத்து விபச்சாரம் - சிக்கிய பாஜக பிரமுகர்!
கல்லூரி மாணவிகளை வீட்டில் வைத்து விபச்சாரம் செய்து வந்த பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் நடைபெற்று வருவதாக திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதை அடுத்து விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் சிந்தாமணி பகுதியிலுள்ள அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது ஒரு ஆணும் பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர். அந்த வீடு ஸ்ரீரங்கம் 68ஆவது கிளை பாஜக பிரமுகர் கோபிநாத்துக்கு சொந்தமான வீடு என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லுாரி மாணவிகளை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பாஜக பிரமுகரிடம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.