அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில பதவி உயர்வு: தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு

By Irumporai Aug 05, 2022 02:48 AM GMT
Report

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தலைமை செயலாளர் உத்தரவு

அரசு பணியாளர்களுக்கு அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளன்று அல்லதுஅரசாணையில், அரசுப் அதற்கு சில நாட்கள் முன்னதாக பதவி உயர்வு அளிப்பதற்கு ஏதுவாக பணியில் உள்ள மூத்தோர் விடுப்பில் செல்வதன் மூலம் ஏற்படும் செயற்கையான காலிப்பணியிடங்களில் பதவி உயர்வு அளிப்பதை கட்டாயமாக தவிர்த்திடுமாறு ஏற்கன்வே கூறப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில பதவி உயர்வு: தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு | Promotion Of All Government Employees

தடையே கிடையாது

அரசுப் பணியாளர்களின் இறப்பு, பணி ஓய்வு, நீண்டகால விடுப்பு ஆகியவற்றால் ஏற்படும் காலிப்பணியிடங்களை நடைமுறையில் விதிகளை பின்பற்றி நிரப்புவதற்கு தடையேதும் இல்லை எனவும் அவ்வாணையில் தெரிவிக்கப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில பதவி உயர்வு: தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு | Promotion Of All Government Employees

ஆகவே, அரசுப் பணியாளர்கள் உரிய காலத்தில் பதவி உயர்வு பெற ஏதுவாக தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலினை வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்த்திடுமாறு அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.