கூட்டத்தில் சில்மிஷம் செய்த நபர் - ஓங்கி பளாரென அறைவிட்ட நடிகை - வைரலாகும் வீடியோ

Viral Video Kerala Indian Actress
By Nandhini Sep 29, 2022 01:56 PM GMT
Report

கூட்டத்தில் சில்மிஷம் செய்த நபரை ஓங்கி பளாரென நடிகை சானியா ஐயப்பன் அறைவிட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 ‘சாட்டர்டே நைட்’  படம்

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நிவின் பாலி. தற்போது இவர் நடிப்பில் ‘சாட்டர்டே நைட்’ என்ற படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி கோழிக்கோடில் உள்ள பிரபல மால் ஒன்றில் நடந்தது. இவ்விழாவில் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

ஓங்கி பளாரென அறைவிட்ட நடிகை

இந்நிகழ்ச்சியை காண ஏராளமான ரசிகர்கள் கூட்டம் அங்கு குவிந்தது. அப்போது, நிகழ்ச்சி முடிந்து நடிகை சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி வெளியே வந்தனர். அவர் வெளியே செல்லும் போது ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது.

இதனால் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி ஆகியோர் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் நடிகைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதனால் கடுப்பான நடிகை சானியா ஐயப்பன், அந்த நபரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார். இது தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பாளர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

வைரலாகும் வீடியோ

இந்த புகாரின் பேரில் கோழிக்கோடு பாண்டிரங்கான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

promotion-event-silmish-actress-slapped