பிரதமர் மோடி கூறியது போல புதுச்சேரியை உருவாக்குவோம் :அமித்ஷா உறுதி

Amit Shah
By Irumporai Apr 24, 2022 10:34 AM GMT
Report

பிரதமர் மோடி கூறியது போல பேஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி, கம்பன் கலையரங்கில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் புதுச்சேரி காவல்துறையில் தேர்வு செய்யப்பட்டோருக்கு பணிநியமன ஆணையை வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி கூறியது போல பேஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம்.

ஊழல் இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வளர்ச்சியைத்தான் காணமுடிகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,புதுச்சேரியில் ரூ.150 கோடி மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரூ.16 கோடியில் தாவரவியல் பூங்கா புனரமைப்பு, ரூ.6 கோடி மதிப்பில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.