தேர்தல் சமயத்தில் 144 தடை உத்தரவு: திடீர் அறிவிப்பு
prohibition
election
notice
Puducherry
By Jon
புதுச்சேரியில் தேர்தல் சமயத்தில் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை சமயத்தில் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்.
அதன்படி இன்று இரவு 7 மணி முதல் 7ஆம் தேதி காலை 7 மணி வரை இருசக்கர வாகனப் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாகக் கூடுதல் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த கூடாது.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.