3 வது டோஸ் தேவையில்லை .. கொஞ்சம் ஏழை நாடுகளை திரும்பி பாருங்கள்: உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்!

who vaccine corona3wave boosterdose
By Irumporai Aug 05, 2021 07:27 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கொரோனா பெரும் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடுகள் தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்துவதை உலகநாடுகள் நடைமுறைபடுத்திவருகின்றன இன்னும் கூறப்போனால் பல நாடுகளில் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணி முடிந்து (3)பூஸ்டர்' டோசும் செலுத்த விரும்புகின்றன.

ஆனால் இன்னும் பல ஏழை நாடுகளில், பெரும்பாலான மக்களுக்கு மட்டுமின்றி முன்களப் பணியாளர்களுக்குக் கூட, தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட கிடைக்கவில்லை. இதனால், ஏழை நாடுகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி 10 சதவீதத்தினருக்காவது கிடைப்பதை உறுதி செய்ய உதவும் வகையில், பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து டெட்ரோஸ்  தனது ட்விட்டர் பதிவில் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவது, கோவிட் பரவலைத் தடுப்பதில் பயன் தருமா என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய பணக்கார நாடுகள் உதவ வேண்டும் என கூறியுள்ளார்.