மாணவிக்கு I Love You சொன்ன பேராசிரியர்! அடித்து துவைத்த சக மாணவர்கள்
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர் அப்துல், இன்று மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த போது திடீரென ஒரு மாணவியிடம் சென்று ”ஐ லவ் யூ” என கூறினார்.
இதனால் மற்ற மாணவர்கள் அதிர்ச்சியடைய, சம்மந்தப்பட்ட மாணவியும் எதிர்ப்பு தெரிவித்தார், இதனால் வாக்குவாதம் எழ பேராசிரியர் வகுப்பறையை விட்டு வெளியே செல்ல முயன்றார்.
விடாமல் துரத்திய மாணவி கேள்வி எழுப்ப, நீ என்னிடம் ஐ லவ் யூ சொல்லவில்லையா? என்று கேட்டார் பேராசிரியர், அப்படி சொல்லவில்லை என்றார்.
Bizarre in #Bengaluru!
— TOI Bengaluru (@TOIBengaluru) March 26, 2026
A professor proposes to a student in the classroom of a medical college at T Begur in Nelamangala. The girl takes objection.
A few moments later: The girl & fellow students thrash the professor. @timesofindia pic.twitter.com/uYz4MyXKke
சிசிடிவி காட்சிகளில் அதை நிரூபிக்கவா என பேராசிரியர் கேட்க, கேமரா பதிவுகளை காண்பியுங்கள் என கூறினார் மாணவி.
இதனால் பேராசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார், சிறிது நேரம் கழித்து மாணவர்கள் மீண்டும் கேள்வி எழுப்ப, சம்மந்தப்பட்ட மாணவி செருப்பை எடுத்து பேராசிரியரை அடித்தார், மற்ற மாணவர்களும் விரட்டி விரட்டி அடித்தனர்.
இக்காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது, பொலிசார் இதுதொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர்.
