மாணவிகளின் வாட்ஸ் அப் குரூப்பில் வந்த போட்டோ - அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம்
விரிவுரையாளர் ஒருவர் தனது அரை நிர்வாண புகைப்படங்களை கல்லூரி மாணவிகளின் வாட்ஸ் அப் குரூப்பில்அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டு பகுதியில் அரசு மகளிர் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு புதுச்சேரியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பொதுப்பணியியல் துறையில் தற்காலிக விரிவுரையாளராக கடந்த 2020 ஆம் ஆண்டு சேர்ந்துள்ளார்.
இதனிடையே கல்லூரி உடற்பயிற்சி கூடத்தில் தான் பயிற்சி செய்த புகைப்படங்களை மாணவிகளின் வாட்ஸ் அப் குரூப்களில் செந்தில்குமார் பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை அடுத்து மாணவிகள் இதுதொடர்பாக பேராசிரியைகளிடம் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முருகன் தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரிக்கப்பட்டது.
அதில் செந்தில்குமார் தனது அரை நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் அவரை பணியில் இருந்து விடுவித்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட கோபத்தில் பேராசிரியைகள் பற்றி சமூக வலைதளங்களில் செந்தில்குமார் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் முருகன் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.