ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பு... ராஜினாமா செய்த பேராசிரியர்..!

hijabprohibitionjainpucollege tumkurprofessorresigned hijabprohibited
By Swetha Subash Feb 18, 2022 01:40 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

ஹிஜாபுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து கல்லுாரி பேராசிரியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து

இந்துத்துவா மாணவர்கள் காவி துண்டு அணிந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த விவகாரம் காட்டு தீ போல பரவியது.இந்நிலையில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி மறுக்கபட்டு வருகிறது.

இதனிடையே கர்நாடகா மாநிலம் டும்கூரில் உள்ள ஜைன் பியூ கல்லுாரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சாந்தினி.

3 ஆண்டுகளாக அந்த கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் அவரை அந்த கல்லுாரி முதல்வர் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என தெரிவித்துள்ளார்.

இதற்கு பேராசிரியர் சாந்தினி கடந்த 3 ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து வருவதாகவும் இது என்னுடைய உரிமை என தெரிவித்துள்ளார்.

ஆனால் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என கூறியுள்ளார்.இதையடுத்து பேராசிரியர் சாந்தினி தனது பேராசிரியர் பணியை ராஜினாமா செய்துள்ளார்.