இனி டிவியில் காணும் உணவுகளை வீட்டில் இருந்தே சுவைக்கலாம் - வந்துவிட்டது ஜப்பானின் புதிய தொழில்நுட்பம்
ஜப்பானில் பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சியில் பிரதிபலிக்கும் உணவை நக்கி சுவைக்கும் முன்மாதிரி டிவியை உருவாக்கியுள்ளார்.
‘டேஸ்ட் தி டிவி’ என்று அழைக்கப்படும் இந்த டிவியை உருவாக்கிய, டோக்கியோவின் மெய்ஜி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஹோமெய் மியாஷிதா என்ற பேராசிரியர் பேசுகையில்,
“கோவிட்-19 காலக்கட்டத்தில், இந்த வகையான தொழில்நுட்பம் மக்கள் வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் விதத்தை மேம்படுத்தும்.
உலகின் மறுபுறத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவது போன்ற அனுபவத்தை, வீட்டில் தங்கியிருந்தும் மக்கள் பெறுவதை சாத்தியமாக்குவதே குறிக்கோள்” என தெரிவித்துள்ளார்.
மேலும், சுமார் 30 மாணவர்களைக் கொண்ட குழுவுடன் இணைந்து பணியாற்றும் மியாஷிதா, உணவுச் சுவையை அதிகப்படுத்தும் ஃபோர்க் உட்பட பல்வேறு சுவை தொடர்பான சாதனங்களையும் தயாரித்துள்ளார்.
கடந்த ஆண்டில் தான் டேஸ்ட் தி டிவி முன்மாதிரியை உருவாக்கியதாகவும், ஒரு வணிகப் பதிப்பை உருவாக்க ஜப்பான் மதிப்பில் 100,000 யென் (£653) செலவாகும் என்றும் அவர் கூறினார்.