கல்லூரி மாணவிகளை மேலாடையை அகற்ற சொன்ன பேராசிரியரால் பரபரப்பு!
அமெரிக்காவில் கல்லூரி மாணவிகளை அவர்களது பேராசிரியர் மேலாடையை அகற்ற கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி.யில் தக்கோமா என்ற பகுதியில் மோண்ட்கோமெரி என்ற கல்லூரி உள்ளது. இங்கு படித்து வந்த மாணவிகளில் 11 பேரை கடந்த 2019-ம் ஆண்டு சில்வர் ஸ்பிரிங் கேம்பஸ் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின்போது,
மாணவிகளின் மேலாடையை கழற்றி விட்டு விளையாட்டுக்கான உள்ளாடையுடன் இருக்கும்படி வலியுறுத்தி உள்ளார். அதன்பின்னர், அவர்களது மார்பகங்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.
விசாரணை
இந்நிலையில், இது குறித்து விசாரணை நடந்து வந்தது, அதில் அவர் மாணவிகளிடம் பேசியது மருத்துவ தொடர்புடையது என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது, அதில் கடந்த 3 மாதங்களாக தீவிர விசாரணை நடந்து வந்தது.
அதில் அவர் மாணவிகளை மேலாடைகளை அகற்ற கூறியது தெளிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பேராசிரியரை விசாரணைக்கு பின்னர் முதலில், விடுமுறை அளிக்கப்பட்டு, பின்பு பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.