வடிவேலு இப்படி நம்பவைச்சு; என் மகன் வாழ்க்கையே போச்சு - கதறிய பிரபல தயாரிப்பாளர்!
தயாரிப்பாளர் வி.சேகர் வடிவேலு மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வி.சேகர்
பிரபல பழம்பெரும் தயாரிப்பாளர் வி சேகர். இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலு குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், கேப்டனை வடிவேலு அவ்வளவு கீழ்த்தரமாக பேசினார்.

அவர் அப்படி அவர் பேசி இருக்கக்கூடாது காரணம் என்னவென்றால், கேப்டன் இயல்பிலேயே மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். ஆனால் வடிவேலு அதையெல்லாம் மறந்து விட்டு, அவரை தாறுமாறாக பேசினார் வடிவேலால் எனக்கு கூட ஒரு பாதிப்பு வந்தது.
சரவணா பொய்யன் என்ற படத்தை நான் எடுத்தேன்.அதில் என்னுடைய மகனை நடிக்க வைக்க விரும்பினேன். அந்த படத்தில் வடிவேலுவை நடிப்பதற்காக அழைத்தேன். அப்போது அவர், என்னை எப்படி நீங்கள் உங்களது படங்களில் நடிக்க வைத்து தூக்கி விட்டீர்களோ, அதே போல உங்களது மகனையும் நான் தூக்கி விடுகிறேன்.
வடிவேலு செய்த செயல்
படத்தில் அவனுக்கு மாமாவாகவோ, அண்ணனாகவோ என எந்த கேரக்டர் இருந்தாலும், அதை செய்து கொடுக்கிறேன் என்றார். அதை நம்பிதான் நான் எம்பிஏ முடித்து வெளிநாடு செல்வதாக இருந்த என்னுடைய மகனை, இங்கே அழைத்து வந்து படங்களில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கினேன்.

படத்திற்கான வேலைகளை ஆரம்பித்தோம். ஆனால், திடீரென்று வடிவேலு, நான் திமுக சார்பாக தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டும், ஆகையால் பட சம்பந்தமான வேலைகளை ஒரு மாதம் தள்ளி போடுங்கள் என்று சொன்னார். அந்த தேர்தலில் அதிமுக ஜெயித்து விட்டது.
மேலும் தான் மதுரை சென்று விட்டதாகவும், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு அங்கு வரமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டார். இதனால் என் மகன் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக வேதனைதெரிவித்துள்ளார்.   
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    