நடிகர் விமல் அளித்த பணமோசடி புகார் : தயாரிப்பாளர் சிங்காரவேலனை கைது செய்தது போலீஸ்
பணமோசடி தொடர்பாக நடிகர் விமல் அளித்த புகாரில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னர் வகையரா படத்தில் நடித்தபோது விமலுக்கும் திரைப்பட தயாரிப்பாளருமான சிங்காரவேலனுக்கும் பிரச்சினை இருந்து வந்தது.
தனது பெயரை பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரித்து தயாரிப்பாளர் சிங்காரவேலன் பணமோசடியில் ஈடுபடுவதாக நடிகர் விமல் புகார் அளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து விருகம்பாக்கம் போலீசார் சிங்காரவேலன் மீதும் அவரது நண்பர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தான் விருகம்பாக்கம் போலீசார் தயாரிப்பாளர் சிங்காரவேலனை கைது செய்துள்ளனர்.
நடிகர் விமல் மீது ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் மற்றும் திரைப்பட விநியோகிஸ்தர் கங்காதரன் ஆகியோர் பணமோசடி புகார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.