எஸ்கேப்பான ரவீந்தர்..."அப்படி" ஒரு கண்டிஷன் போட்டு வெளியே விட்ட நீதிமன்றம்!!
பண பரிவர்த்தனை வழக்கில் கைதாகி இருக்கும் தயாரிப்பாளர் ரவிந்தருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ரவீந்தர் மோசடி
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். லிப்ரா புரோடக்சன்ஸ் பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து ரூ.16 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.இதனால் செப்டம்பர் மாதம் 7 ம் தேதி கைது செய்யப்பட்டார்.
நிபந்தனை ஜாமீன்
இந்நிலையில், இந்த வழக்கில் தயாரிப்பாளர் ரவீந்தருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 வாரங்களில் 5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்த ரவிந்தருக்கு ஐகோர்ட் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
ரவீந்தர் வாங்கி கணக்கில் பல பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது என காவல்துறை குறிப்பிட்ட நிலையில் ஆனால் அவை இந்த வழக்கில் தொடர்புடையபவையா? என்று தெரியவில்லை என தெரிவித்த நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.