பிரபல தயாரிப்பாளர் டி.ராமராவ் காலமானார் - திரையுலகினர் இரங்கல்..!
அமிதாப் பச்சன்,ரஜினிகாந்த் விஜய் ஆகியோரை வைத்து திரைப்படங்களை தயாரித்த மூத்த தயாரிப்பாளரும் இய்ககுநருமான டி.ராமராவ் காலமானார்.
தெலுங்கு மற்றும் இந்தியில் 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்.இவர் தமிழில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். 83 வயதாகும் ராமராவ் இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.
தி.நகர் பாலாஜி அவென்யூ முதல் தெருவில் வசிக்கும் ராமராவ் வயது மூப்பு காரணமாக அதிகாலை 12.30 மணியளவில் இறந்தார்.
இன்று மாலை 4 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவருக்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது. இவருக்கு தாதினேனி ஜெயஸ்ரீ என்ற மனைவியும்,சாமுண்டீஸ்வரி,நாக சுசீலா,அஜய் ஆகிய குழந்தைகளும் உள்ளன.
ஸ்ரீ லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் பேனரில் தமிழ் படங்களை தயாரித்த இவர், விக்ரம், விஜய், ஜெயம் ரவி, விஷால் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை தயாரித்தார்.
தில்,யூத்,அருள்,சம்திங் சம்திங்,உனக்கும் எனக்கும்,மலைக்கோட்டை போன்ற சூப்பர் ஹிட் படங்களை இவர் தயாரித்துள்ளார்.
இவரின் மறைவிற்கு தெலுங்கு,ஹிந்தி,தமிழ் திரையுலகை சேர்ந்த திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மனைவி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அரசு IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil