ரஜினி பட தயாரிப்பாளருக்கு சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Tamil Cinema Tamil nadu Crime Tamil Producers
By Jiyath Aug 09, 2023 02:42 PM GMT
Report

கோச்சடையான் பட தயாரிப்பாளரான முரளி மனோகருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பண விவகாரம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் முரளிமனோகருக்கும், அபிர் சந்த் நாகர் என்பவருக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ரூ.10 கோடியை அபிர் கொடுத்துள்ளார்.

ரஜினி பட தயாரிப்பாளருக்கு சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Producer Murali Manohar 6 Month Jail Ibc

திரைப்பட உரிமையை வேறு யாருக்கேனும் கைமாறும் பட்சத்தில் அந்த தொகையில் 20 சதவிகிதமும், லாபத்தில் பங்கும் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி அபிருக்கு கொடுக்க வேண்டிய 5 கோடி ரூபாய்க்கு கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி முரளிமனோகர் வழங்கிய காசோலை, அவரது வங்கிக் கணக்கில் பணமில்லாமல் திரும்பிவந்தது. இந்நிலையில் காசோலை மோசடி தொடர்பாக முரளிமனோகர் மீது அபிர் சந்த் நாகர் மாற்றுமுறை ஆவண சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை விரைவு நீதிமன்றம் முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை மற்றும் ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு 7 கோடியே 70 லட்சம் ரூபாயை அபிர் சந்த் நாகருக்கு முரளி மனோகர் வழங்க வேண்டும் என்றும் கடந்த 2021ம் ஆண்டு சேம்பர் 4 தேதி உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவு

இந்த உத்தரவை எதிர்த்து முரளி மனோகர் தரப்பிலிருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.தஸ்னீம் கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் முரளிமனோகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்தும், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளார். அதேசமயம் அல்லிகுளம் நிர்ணயித்த தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.