“நடிகை த்ரிஷா திமிர் பிடித்தவர்” - பிரபல தயாரிப்பாளர் விளாசல்
நடிகை த்ரிஷா குறித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் விமர்சித்திருப்பது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா தமிழில் கடைசியாக பரமபதம் விளையாட்டு என்ற படத்தில் நடித்திருந்தார். ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியது.
இதனிடையே தற்போது பொன்னியின் செல்வன், கர்ஜனை, ராங்கி,சதுரங்க வேட்டை 2, ஆகிய படங்களில் நடித்து வரும் த்ரிஷா குறித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், த்ரிஷா தான் நடித்த திரைப்பட விளம்பரங்களுக்கு வருகை தருவதில்லை என்றும், இதனால் தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் த்ரிஷா மிகவும் திமிர் பிடித்தவர்.
இத்தனை வருடங்கள் ஆகியும் த்ரிஷா தனது நடிப்புத் திறனை எந்த வகையிலும் வளர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் அவரின் சம்பளம் மட்டும் ஏறிக்கொண்டே இருக்கிறது.
அவர் நடித்த திரைப்படங்களின் விளம்பரத்துக்கு வருமாறு தயாரிப்பாளர் சங்கம் வாயிலாக அழைப்பு விடுத்தால் திரிஷாவின் தாயார் எங்களை மிரட்டுகிறார் எனவும் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
இது தமிழ் திரையுலக ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.