பிரபல தயாரிப்பாளர் காலமானார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Nandhini Apr 24, 2022 12:35 PM GMT
Report

கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்தவர் ஜான் பால் (வயது 71). இவர் பிரபல மலையாள பட தயாரிப்பாளர். இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார்.

1980 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டியின் பல படங்களுக்கு இவர்தான் திரைக்கதையை எழுதியவர். ஜான் பால் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, இவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடந்த 2 மாதமாக சிகிச்சையில் இருந்த ஜான்பால், சிகிச்சைப் பலனின்றி நேற்று மதியம் திடீரென காலமானார்.

இவர் உயிரிழந்ததை அறிந்த திரை உலக பிரபலங்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள், ரசிகர்கள், திரை பிரபலங்கள் ஜான் பால் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பிரபல தயாரிப்பாளர் காலமானார் - அதிர்ச்சியில் ரசிகர்கள் | Producer Death