Sunday, Jul 6, 2025

பிரபல தயாரிப்பாளர் வாராகி கைது - சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

By Nandhini 3 years ago
Report

சினிமாத்துறையில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் தான் வாராகி (46). இவர் ‘சிவா மனசுல புஷ்பா’ உட்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். வாராகி விருகம்பாக்கத்தில் உள்ள நடேசன் நகரில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் சுஜிதா என்ற பெண் மீது ஆசைப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அப்பெண்ணிடம் இவர் பல முறை தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், சுஜிதா இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.

நீண்ட மாதங்களாக இவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் சுஜிதா. இதனையடுத்து, சுஜிதா வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வாராகி மீது புகார் கொடுத்தார்.

இவர் கொடுத்த இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தயாரிப்பாளர் வாராகியை கைது செய்தனர். ஏற்கெனவே, இவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு உள்ளது.

அதுமட்டிமில்லாமல் வாராகி மீது சேலையூர் உட்பட 4 காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட வாராகியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

பிரபல தயாரிப்பாளர் வாராகி கைது - சினிமா வட்டாரத்தில் பரபரப்பு | Producer Arrest