முத்துராமலிங்க தேவரை அவமதித்தாரா சூர்யா? - 14 ஆண்டுகளுக்குப் பின் கிளம்பும் புது சர்ச்சை
நடிகர் சூர்யா நடித்த வேல் படத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவமதித்ததாக தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா, நடித்து தயாரித்து கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியான ஜெய்பீம் படம் நாளுக்கு நாள் கடும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. படத்தில் இடம் பெற்ற காட்சிகளில் வன்னியர்களின் அடையாளம் இடம் பெற்றதாக பாமக மற்றும் வன்னியர் சங்கங்களின் நிர்வாகிகள், தொண்டர்கள் நடிகர் சூர்யாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி சூர்யாவுக்கு 9 கேள்விகள் கொண்ட கடிதம் எழுத அதற்கு சூர்யா தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இதனிடையே இயக்குநர் பாரதிராஜா சூர்யாவுக்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸூக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
இதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், ஜெய்பீம் திரைப்படத்தில் சாதிவெறி பிடித்த, கொடுமைக்கார, சைக்கோ காவல் உதவி ஆய்வாளர் (வில்லன்) இல்லத்தில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னிக் குண்டம் இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட முத்துராம லிங்கத்தேவரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? அல்லது கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலையின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா? அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? படைப்புச் சுதந்திரம் என்று சும்மா இருந்திருப்பீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த பிரச்சனை ஓய்வதற்குள் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் சூர்யா நடித்த படத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவமதித்ததாக கூறி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏஎம் செளத்ரி தேவர் என்ற அந்த தயாரிப்பாளர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்று படமான தேசிய தலைவர் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
டே சூர்யா அயோக்கிய தே.. பயலே வேலு படத்தில் வில்லன் வீட்டில் தேவர் போட்டோ மாட்டிருக்க இனிமேல் உன் படம் தென் மாவட்டத்தில் ஓடாது @Suriya_offl @News18TamilNadu @news7tamil @sunnewstamil @PTTVOnlineNews @dinamalarweb @AruThevarOfficl @ThevarMission @Anbu8940277319 pic.twitter.com/aQa7xscTYI
— AM சௌத்ரிதேவர் film producer (@chowdryam) November 19, 2021
இவர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான வேல் படத்தில் மறைந்த நடிகர் கலாபவன்மணி வில்லனாக நடித்திருப்பார். இந்த படத்தில் வில்லன் வீட்டில் தேவர் படம் இருப்பதாகவும், தேவரை அவமதித்த சூர்யாவின் படங்கள் தியேட்டர் வரவிடமாட்டோம் என்றும், இனிமேல் உன் படம் தென் மாவட்டத்தில் ஓடாது எச்சரிக்கை விடுத்துள்ளார்
ஏற்கனவே ஜெய்பீம் படத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் சூர்யாவை மீண்டும் சாதி அடிப்படையிலான பிரச்சனை துரத்துவது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.