அஜித்தை கடுமையாக விமர்சித்த 'ஆன்டி இண்டியன்' பட தயாரிப்பாளர் - ரசிகர்கள் அதிர்ச்சி

ajith வலிமை produceradhambava
By Petchi Avudaiappan Dec 16, 2021 07:27 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

அஜித்தின் 'வலிமை' பட மேக்கிங் வீடியோவை கடுமையாக விமர்சனம் செய்து 'ஆன்டி இண்டியன்' தயாரிப்பாளர் ஆதம் பாவா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  

அதில் அஜித் பைக்கில் இருந்து கீழே விழுவதும் பின் உடனே எழுந்து மறுபடியும் பைக் சேஸிங் செய்வதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த காட்சிகள் பார்ப்பவர்கள் நெஞ்சை பதை பதைக்கும் வகையில் மிரட்டலாக இருந்தது. இந்த மேக்கிங் வீடியோ ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பினை பன்மடங்கு எகிற செய்துள்ளது.

இந்நிலையில் 'ஆன்டி இண்டியன்' பட தயாரிப்பாளர் ஆதம் பாவா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த மேக்கிங் வீடியோவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், இது போன்ற செயல் உங்கள் ரசிகர்களையும் செய்யத்தூண்டும் அஜீத் அவர்களே சென்னை மாநகரில் இது போன்று பைக் ஓட்டியவர்கள் மட்டுமல்லாமல் எதிரே வருபவர்களும் பலியாகிய பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது.

வாகனத்தின் பெயரே இரு சக்கர வாகனம்தான் அதை ஒரு சக்கரத்தில் ஓட்டினால் நியாயமாரே? என பதிவிட்டுள்ளார்.ஆதம் பாவாவின் இந்த ட்வீட் அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. '