சபரிமலை கூட்ட நெரிசல்; தரிசனமே செய்யாமல் திரும்பும் பக்தர்கள் - அவசர ஆலோசஆலோசனை!
மண்டல பூஜைக்காக நடை திறந்தது முதல் பக்தர்கள் தரிசனம் செய்யத் தொடங்கிவிட்டனர்.
கூட்ட நெரிசல்
கேரளா மட்டுமல்லாது தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு மாலையிட்டுச் செல்வது வழக்கம். பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படும்.
இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கூட்ட நெரிசல் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், சிலர் சந்நிதானமே செல்ல முடியாமல் கூட்ட நெரிசல் காரணமாக பம்பாவில் இருந்தே திரும்பிவிடுகிறார்கள்.
முதல்வர் ஆலோசணை
கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸும் நிர்வாகிகளும் திணறுவதாக கூறப்படுகிறது. தேவஸ்தானம் தரிசன நேரத்தை 1 மணி நேரமாக கூடுதலாக வழங்க முடிவு செய்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பம்பைக்கு வாகனம் மூலம் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி ஐயப்பன் பக்தர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிக்கணக்கில் அங்கே பக்தர்கள் காத்திருக்கும் வீடியோ காட்சிகளும், பேருந்தில் ஆபத்தான முறையில் இடம் பிடிக்கும் காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அதில், டிசம்பர் 4 ஆம் தேதி முதல் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்ததே தற்பொழுது நிலவும் கூட்ட நெரிசலுக்கு காரணம் என தெரிவித்துள்ள நிலையில், பக்தர்கள் கூட்டத்தை சரியான முறையில் ஒருங்கிணைத்து கையாளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.