Champions Trophy: இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? யாருக்கு எவ்வளவு!
சாம்பியன்ஸ் கோப்பைக்காக கொடுக்கப்படும் பரிசுத்தொகை குறித்து பார்ப்போம்.
சாம்பியன்ஸ் கோப்பை
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் இந்திய அணி $2.24 மில்லியன் (சுமார் ரூ.19.5 கோடி) பரிசுத்தொகையை வென்றுள்ளது.
பரிசுத்தொகை
இரண்டாம் இடம் பிடித்த நியூசிலாந்து அணிக்கு $1.12 மில்லியன் (சுமார் ரூ.9.78 கோடி) பரிசுத்தொகையை பெறவுள்ளது.
அரையிறுதியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கும், தலா $560,000 (சுமார் ரூ.4.89 கோடி) பரிசுத்தொகையை வென்றுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு கொடுத்த பரிசுத்தொகையை விட, தற்போது சாம்பியன்ஸ் கோப்பைக்காக கொடுக்கப்படும் பரிசுத்தொகை 53% அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.