மேயர் பிரியா ராஜன் அவரை காதலிக்கிறார்..! அவரே சொன்ன தகவல்..யாரு'னு தெரியுமா..?

Tamil nadu DMK Priya Rajan
By Karthick Dec 22, 2023 02:43 AM GMT
Report

சென்னை மேயர் பிரியா ராஜன் ஐபிசி தமிழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு அரங்கு திறப்பு விழா

சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஐபிசி தமிழ் அலுவலகத்தில் ஐபிசி தமிழின் புதிய படப்பிடிப்பு அரங்கு (ஸ்டூடியோ) திறப்பு விழா  நடைபெற்றது.

priyarajan-about-daughter-in-ibctamil-exclusive

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  புதிய படப்பிடிப்பு அரங்கை (ஸ்டூடியோ) திறந்து வைத்தார். பின்னர் ஐபிசி தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டியை அளித்தார்.

முதலமைச்சர் வைத்த நம்பிக்கை  

தான் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளியே செல்வதாக இருந்தால் இரவு நேரத்தில் தான் உணவகம் உள்ளிட்டவற்றிக்கு செல்வோம் என்றும் தனக்கு தேவையான ஆடைகளை கணவர் தேர்ந்தெடுப்பார் என்றும் பல்வேறு சூழலில் என்னுடன் இருப்பது என்னுடைய கணவர் தான் என்றார்.

priyarajan-about-daughter-in-ibctamil-exclusive

மேலும், முதலமைச்சர் இளைஞர்களை ஆதரிப்பதாகவும், அவர்களை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார். அமைச்சர் சேகர் பாபு தொடர்ந்து தனக்கு அரசியல் சார்ந்த அறிவுரைகளை கொடுப்பார் என்றும் தெரிவித்தார்.

தன் மீது நம்பிக்கை வைத்து மேயர் பதவி வழங்கியதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார்.

அவரை காதலிக்கும் பிரியா

நான் எனது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்பதால் அவர்களிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்து, தன்னுடைய மகளை மிகவும் காதலிப்பதாகவும் தெரிவித்தார் மேயர் பிரியா ராஜன்.

தனது மகள் ஆரம்ப கட்டத்தில் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியவில்லை என்பதை புரிந்து கொள்ளவில்லை என்ற அவர், ஆனால் தற்போது செய்திகளில் வருவது, முதலமைச்சருடன் இருப்பது போன்றவற்றை பார்த்து அம்மா வேலையில் பிசியாக இருக்கிறார் என்பதை தனது மகள் புரிந்துகொண்டார் என்றார்.

அந்த சுவாரசிய முழு பேட்டியை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்...