அப்பா ஐ மிஸ் யூ - தந்தையின் கல்யாண நாளில் உருக்கமான பதிவை வெளியிட்ட பிரபல நடிகை
நடிகை பிரியங்கா சோப்ரா தனது பெற்றோரின் திருமண நாளையொட்டி உருக்கமான பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை கடந்த 2013 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அப்போது 30 வயதாக இருந்த பிரியங்காவுக்கு தந்தையின் பிரிவு பெரும் பாதிப்பை கொடுத்தது.
தந்தையின் வெற்றிடத்தை நிரப்ப அவர் ஏங்கிக்கொண்டிருந்த நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெற்றோரின் திருமண நாளையொட்டி அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அதில் அவரது தந்தை, தாய் மது அகோரி சோப்ராவுக்கு ரோஜாப் பூ ஒன்றை வழங்குகிறார். இந்த புகைப்படத்தை பதிவுட்டுள்ள அவர், ''உங்கள் ஆண்டுவிழாவை நான் எப்போதும் இப்படித்தான் நினைவில் கொள்கிறேன். மிஸ் யூ அப்பா. லவ் யூ என தெரிவித்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா , அவரது கணவர் நிக் ஜோன்ஸ் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடகை தாய் மூலம் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.