இனி இவர்கள்தான் என் உலகம்...பிரியங்கா வெளியிட்ட புகைப்படம் - தீயாய் பரவும் தகவல்
பிரியங்கா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பிரியங்கா
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்தவர் பிரியங்கா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘பிக்பாஸ் சீசன் 5’ கலந்து கொண்ட பிரியங்காவிற்கு இந்நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்று விட்டார்.
காதல் திருமணம்
விஜய் டிவியில் டெக்னிஷியனாக பணியாற்றி வந்த பிரவீன் குமார் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு பிரியங்கா காதல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் ஒரு சில இடங்களில் மட்டும்தான் அடையாளப்படுத்தினார் பிரியங்கா. அதன் பிறகு அவரைப் பற்றி எங்கேயும் பிரியங்கா வெளிப்படுத்தியது கிடையாது.
விவாகரத்து சர்ச்சை
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் எங்கேயும், அவருடைய கணவரை குறித்து பேசவில்லை. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் சிறந்த தொகுப்பாளினி விருதை பெற்ற அவர் அண்மைகாலமாக போட்டோஷூட் பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ளார்.
முற்றிலுமாக பிரியங்கா கணவரை பிரிந்து விட்டார் என்ற வதந்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அம்மாவுடன் வசித்து வரும் பிரியங்கா தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக பேச மறுத்து வருகிறார்.
இதனால், ரசிகர்கள் கேள்விக்கு மேல் கேள்வியாக அவரிடம் கேட்டு வருகின்றனர். ஆனால், ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பிரியங்கா தெளிவாக பதில் சொல்ல மறுத்து வருகிறார்.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், பிரவீனை பிரியங்கா விவாகரத்து செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
தற்போது, தன்னுடைய இணையதளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரியங்கா. அதில், தன்னுடைய அம்மா மற்றும் தம்பியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, இவர்கள்தான் இனி என்னுடைய உலகம் என்று பதிவிட்டுள்ளார்.