மோசமாக சண்டை போட்டுக் கொண்ட தாமரை மற்றும் பிரியங்கா - அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லை மீறிய வார்த்தைகளை போட்டு பிரியங்கா மற்றும் தாமரை போட்டுக் கொண்ட சண்டை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டதட்ட இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்-2வுக்கான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஒவ்வொருவருக்கும் தலா 10 முட்டைகள் வழங்கப்பட்டு டாஸ்க் முடிவில் எந்த 2 நபர்களின் கூடையில் முட்டைகள் குறைவாக உள்ளதோ அவர்கள் போட்டியிலிருந்து வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
ப்ரோமோக்களில் ராஜு மற்றும் பாவனியின் சண்டை பெரிதாக வெடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தாமரை மற்றும் பிரியங்காவின் சண்டை சபாஷ் சரியான போட்டியாக அமைந்தது.
தாமரையின் முட்டைகளை எல்லாம் அமீர் ஆரம்பத்திலேயே இஷ்டத்துக்கு உடைக்க ஆரம்பித்து விட்டார். தாமரை பிரியங்காவின் முட்டைகளை உடைக்க நினைப்பது தெரியாமல் அமீரை பிரியங்கா துணைக்கு அழைக்க சண்டை. வெடித்தது . இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளி விட தாமரை தனது வெயிட்டை போட்டு பிரியங்காவை படாரென தள்ளி விட பயந்து போய் அவர் கத்த ஆரம்பித்து விட்டார் .
தாமரை செல்வி ஒரு புத்திசாலியான பிளேயர். நம்மை விட அவளுக்கு எல்லா விஷயமும் தெரியும் என்றே ஆரம்பத்தில் இருந்து சொல்லி வந்த பிரியங்கா திடீரென தாமரைக்கு எல்லாத்தையும் நான் தான் கத்துக் கொடுத்தேன். அவளுக்கு பிரச்சனைன்னா நான் தான் முன்னாடி வந்தேன். எனக்கே இப்படி பண்ணிட்டாளே என டபுள் கேம் ஆட ஆரம்பித்து விட்டார்.
நீ கத்துனா உன்னை விட நான் கத்துவேன், பொம்பளையா நீ என தாமரை எல்லை மீறி பிரியங்காவுக்கு எதிராக வார்த்தைகளை விட்டதை ஹவுஸ்மேட்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. பாவனியை தொடர்ந்து தாமரையின் முட்டைகள் அனைத்தும் உடைக்கப்பட்ட நிலையில் அவரும் பெட்ரூமில் போய் உட்கார்ந்து கொண்டார். நீ போய் விளையாடு சிபி, ராஜு கிட்ட முட்டையை கேளு என அனுப்பி வைக்க மறுபடியும் வந்து பிரியங்காவிடமே தாமரை மல்லுக்கு நின்றது பெரிய பிரச்சனையை கிளப்பியது. கடைசியில் அனைத்து முட்டைகளையும் இழந்த தாமரை இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.