பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா செய்த காரியம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டில் விஜயதசமி கொண்டாட பொருட்கள் அனுப்பப்பட்ட நிலையில் அதில் இருந்து பிரியங்கா ஸ்வீட்டை திருட்டுத்தனமாக சாப்பிட்ட சம்பவத்தை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் திருநங்கை நமீதா மாரிமுத்து சில தினங்களுக்கு முன் வெளியேறினார்.
இதனிடையே நிகழ்ச்சியின் 13வது நாளான நேற்று போட்டியாளர்களுக்கு விஜயதசமி கொண்டாட்டத்திற்காக டாஸ்குகள் கொடுக்கப்பட்டிருந்தன. அனைவரும் மேக்கப் போட்டு தமிழ்ச்செல்வி தலைமையில் ஒரு நாடகத்தை அரங்கேற்ற வேண்டுமென டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் ஸ்டோர் ரூமில் பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.
அனைத்து போட்டியாளர்களும் வேகமாக வந்து அதனை எடுத்துச் சென்றனர். கடைசியாக பிரியங்கா வந்து தனியாக இருக்கும் போது அங்கு இருக்கும் ஸ்வீட்டை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுகிறார். அதை அபிநய் பார்த்துவிட அவரும் எடுத்து சாப்பிடுகிறார். திருட்டுத்தனமாக சாப்பிட்டு விட்டு அதை அப்படியே மூடி வெளியில் பிரியங்கா கொண்டு செல்கிறார் . அதற்கடுத்து அக்ஷரா உள்ளே வர பிரியங்கா திரும்பிக் கொண்டு சமாளிக்கிறார். அவரால் வாய் திறந்து கூட பேச முடிவதில்லை, பேசாமலேயே சமாளிக்கிறார்.
இதனை இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.