நடுத்தெருவில் முத்தமிட்டுக் கொண்ட பிரபல நடிகை - வைரலாகும் போட்டோ
நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனாஸ் தெருக்களில் முத்தமிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரபல பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ரா பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என அனைத்து உலகளவிலான திரையுலகில் தடம் பதித்த பின் குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனசை காதலித்து கடந்த 2018 ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் செம பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா கணவருடன் நேரத்தை செலவழிப்பதற்கும் தவறுவதில்லை. அடிக்கடி கணவருடன் நேரத்தை செலவழிக்கும் போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இருவர் குறித்தும் அடிக்கடி பல சர்ச்சையான சம்பவங்கள் தோன்றி மறைவதுண்டு. அதற்கெல்லாம் முத்தமிடும் போட்டோக்களை கொண்டு பதிலடி கொடுக்கப்பட்டும்.
அந்த வகையில் பெட்ரோல் போடும் இடத்தில் பிரியங்காவும்- நிக் ஜோன்ஸும் லிப்லாக் கிஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. காருக்குள் அமர்ந்திருக்கும் பிரியங்காவிற்கு அவரது கணவர் வெளியில் இருந்தபடி முத்தம் கொடுக்கிறார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து ரசிக்கின்றனர்.

யாழில் அதி உயர் பாதுகாப்பு வலயம்... கிடப்பில் போடப்பட்ட நம்பியாருடைய அறிக்கை : தமிழ் எம்.பி பகிரங்கம் IBC Tamil

எக்னெலிகொடவை கொலை செய்து தீவில் புதைத்த கடற்படையினர்! கட்டவிழ்க்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் மர்மங்கள் IBC Tamil
