ரஜினியின் அடுத்தப்படத்தில் இந்த நடிகைக்கு தான் வாய்ப்பா? - ஆச்சரியத்தில் திரையுலகினர்
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தப்படத்தின் அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தனது 169வது படத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் இணையவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்த படத்தை ஆரம்பிப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த படத்தில் விஜய் சேதுபதி, வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா மோகன் ரஜினியின் 169வது படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடி இல்லை என கூறப்படுகிறது. எது எப்படியோ ரஜினி படத்தில் பிரியங்கா இடம் பெற்றால் சரிதான் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.