Wow... ப்ரியாங்கா காந்தியோடு ஜாலியா பனிசறுக்கு சவாரி செய்த ராகுல் காந்தி... - வீடியோ வைரல்...!
காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தன் சகோதரி ப்ரியாங்காந்தியுடன் பனிசறுக்கு சவாரி செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த ஆண்டு இறுதியில் கன்னியாகுமரியில் தொடங்கினார்.
பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வந்தார் ராகுல்காந்தி. ராகுல்காந்தி செல்லும் இடமெல்லாம், பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்பு கொடுத்தனர்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றி கடந்த மாதம் நிறைவு செய்யப்பட்டது.

பனிசறுக்கு சவாரி செய்த ராகுல் காந்தி, பிரியங்கா
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தற்போது ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு தனிப்பட்ட முறையில் சென்றுள்ளனர். அங்கு தன் சகோதரி ப்ரியங்கா காந்தியுடன், ராகுல் காந்தி பனிசறுக்கு செய்துள்ளார்.
ராகுல் காந்தி, பிரியங்கா இருவரும் மாறி, மாறி பனிச்சறுக்கு வாகனத்தை ஓட்டியுள்ளனர்.
ராகுல் காந்தி கண்ணாடி அணிந்து ப்ரியங்காந்தியுடன் மாஸாக வாகனம் ஓட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது தொண்டர்கள் சந்தோஷத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
RaGa ?? pic.twitter.com/WUfzeK9o52
— Srinivas BV (@srinivasiyc) February 19, 2023