சிறுவர்கள் போல் பனிக்கட்டியில் விளையாடிய ராகுல், ப்ரியங்கா காந்தி... - வைரலாகும் வீடியோ..!
இந்திய ஒற்றுமை பயணத்தில் சிறுவர்கள் போல் ராகுல் காந்தியும், ப்ரியங்கா காந்தியும் விளையாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கடந்த ஆண்டு இறுதியில் கன்னியாகுமரியில் தொடங்கினார். பாதயாத்திரையில் தொடர்ந்து தன் நடை பயணத்தை மேற்கொண்டு வந்தார் ராகுல்காந்தி.
ராகுல்காந்தி செல்லும் இடமெல்லாம், பல்வேறு தரப்பினர் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், நடனமாடியும் வரவேற்பு கொடுத்தனர். ராகுல்காந்தி, செல்லும் இடங்களில் நடனம் ஆடியும், பாட்டு பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை நிறைவு
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடைந்த நிலையில், ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது, ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி உடனிருந்தனர்.

சிறுவர்கள் போல் விளையாடி மகிழ்ந்த ராகுல்-ப்ரியங்கா
தற்போது, இந்திய ஒற்றுமை பயணத்தில் சிறுவர்கள் போல் ராகுல் காந்தியும், ப்ரியங்கா காந்தியும் விளையாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடா.. என்ன ஒரு பாசம் என்று மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Sheen Mubarak!?
— Rahul Gandhi (@RahulGandhi) January 30, 2023
A beautiful last morning at the #BharatJodoYatra campsite, in Srinagar.❤️ ❄️ pic.twitter.com/rRKe0iWZJ9