தந்தையின் நினைவிடத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் ப்ரியங்கா காந்தி.!
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த விதத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி தமிழகம் வர உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள வரும் பிரியங்கா காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பிரியங்கா காந்தி தமிழகம் வர உள்ளார்.
முன்னதாக மார்ச் 27ம் தேதி அவர் தமிழகம் வருவதாக திட்டமிடப்பட்ட நிலையில் பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது ஏப்ரல் 3ல் அவர் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு முதலில் சென்று மரியாதை செலுத்தி பின்னர் தனது அரசியல் பிரச்சாரத்தை அவர் தொடங்க உள்ளார்.
ப்ரியங்கா காந்தி முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கிய பிறகு முதல் முறையாக தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.